ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானது தற்செயலான நிகழ்வல்ல! அரசியல் லாபம் அடையும் நோக்கில் "தர்மயுத்தம்" -பகீர் அறிக்கை

ஜெயலலிதா மரண்ம் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானது தற்செயலான நிகழ்வல்ல! அரசியல் லாபம் அடையும் நோக்கில் "தர்மயுத்தம்" -பகீர் அறிக்கை
Published on

சென்னை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியானது.

இதை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 680 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 540 541 -ம் பக்கங்களில்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ள தயார் நிலையிலிருந்தது தற்செயலான நிகழ்வு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அவர் தர்மயுத்தம் அரசியல் லாபத்திற்காக நடத்தினார் என்றும் கூறி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வரது நெருங்கிய

வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது வாழ்வின் அனனத்து

நிகழ்வுகளையும் அறிந்திருந்தார்.

மறைந்த முதல்வரின் மறைவுக்குப் பிறகு, சிறிதும் காலத்தினை

தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னைப் பொருத்திக்

கொள்ளத் தயார் நிலையிலிருந்து, மறைந்த முதல்வரின் வாரிசாக

அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தற்செயலான

நிகழ்வல்ல/நிகழ்வாகத் தோன்றவில்லை.

அதிகாரமையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாகக்

கிடைத்த பதவி அவருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்னல,

ஏமாற்றத்தினால் கோபமடைந்த ஒ.பன்னீர்செல்வம்,

அரசியல் லாபத்தை அடையும் நோக்கில் 2017 பிப்ரவரியில்

"தர்மயுத்தம்" தொடங்கினார். ஒரு அமைதியான பார்வையாளராக

இருந்த அவர், மருத்துவமனையில் என்ன நடந்தது, குறிப்பாக

சிகிச்சை முறையில் என்ன நடந்தது என்பதை அவர் முழுமையாக

அறிந்திருந்தார். தனது பதவியை இழந்தபின்னர், அவர்

"தர்மயுத்தத்தை" நாடி, சிபிஐ விசாரணையைக் கோரினார்

எனினும், விதிப்படி, துணை முதல்வர் பதவிக்கு அவர்

தன்னை பொருத்திக் கொள்ள வேண்டியிருந்தது, இதுவும்

வல்லவனின் தந்திரமாக இருக்கலாம். அவர் விரும்பியதில் ஒரு பகுதி

மட்டுமே அவருக்குக் கிடைத்திருப்பினும், மாற்றத்தின் மாறாத

தன்மையாக, ஒரு புதிய பரிமாணத்தில், செய்தித்தாளில் வெளியான

மறைந்த முதல்வரது மறைவில் மறைந்துள்ள மர்மம் பற்றிய

பொதுமக்களின் அறிக்கைகள், வதந்திகள் மற்றும் சந்தேகங்களைக்

கொண்ட செய்தியின் அடிப்படையிலேயே இந்த ஆணையம்

அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அவர், இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான

காரணங்களை நிராகரித்துள்ள இந்நிகழ்வு, ஒரு முக்கிய சாட்சி,

நீதிமன்றத்தின் நடவடிகைகளுக்கு விரோதமாக மாறுவதை

நினனவூட்டுவதுடன், நேர்மையாகவும், நியாயமாகவும்,

நிகழ்வுகளின் உண்மை சூழலை வெளிக்கொணரும் நோக்கத்துடன்

அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தில் தாக்கத்தை

ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைகிறது என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com