நமது அம்மா நாளிதழிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் நீக்கம்!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான “ நமது அம்மா” நாளிதழின் நிறுவனர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது அம்மா நாளிதழிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் நீக்கம்!
Published on

சென்னை,

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம் தற்போது உச்சக் கட்ட மோதலாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமைக்குக் கொண்டு வரும் முயற்சியை ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் மூலம் தடுத்திருந்தாலும், நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு - பொதுக்குழுவுக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாலான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நேற்றுவரை வெளிவந்த நாளிதழில் நிறுவனர்களாக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இருந்தது. ஆனால், இன்று வெளிவந்த நாளிதழில் நிறுவனர் எடப்பாடி பழனிசாமி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஈடுபட்டு வருவதால் அக்கட்சி தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com