ஓ.பன்னீர் செல்வம் தனித்துவிடப்படவில்லை எங்களுடன்தான் உள்ளார் - அண்ணாமலை பேட்டி

தேசிய புள்ளி விவரங்களின் படி கல்வியில் தமிழ்நாடு கடைசியில் உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் தனித்துவிடப்படவில்லை எங்களுடன்தான் உள்ளார் - அண்ணாமலை பேட்டி
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு வருகை தந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்திவிட்டு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கமல்ஹாசன் சிறந்த நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நன்றாக உழைக்கிறார். மத்திய நிதி மந்திரி, இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்லவந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவர் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது திருத்தத்தை பதிவு செய்வார் என நம்புகிறேன்.

விஜய் அவரது கட்சி, அவரது கொள்கையை மக்கள் முன்னால் வைக்கட்டும். நாங்கள் ஜனநாயக கூட்டணி கொள்கையை வைக்கிறோம் மக்கள் முடிவு செய்யட்டும். அரசியல் நாகரீகம் என்று உள்ளது. லட்சுமண ரேகையை கடக்கக்கூடாது என்றுதான் விஜய்க்கு சொன்னேன்.

ஓ.பன்னீர் செல்வம் தனித்துவிடப்படவில்லை. அவர் எங்களோடுதான் உள்ளார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது.

கல்வி கூடங்களில் கஞ்சா விற்கும் நிலைமையை திமுக ஆட்சி கொண்டு வந்துள்ளது. கல்வியில் சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடை எப்படி சொல்வது. தேசிய புள்ளி விவரங்களின் படி கல்வியில் தமிழ்நாடு கடைசியில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், பாஜகவைவிட்டு வெளியேறி, தனி கட்சி ஆரம்பிக்க போகிறீர்களாமே என்ற கேள்விக்கு “என்னை பார்த்தால் அப்படி தெரிகிறதா?” என பதில் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com