ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் அளித்த புகார் மனு மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்திக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். அதனடிப்படையில் அவர் நேற்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார்.

அவர் அளித்த விளக்கத்தை வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com