ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து


ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து
x

ஓ.பன்னீர்செல்வத்துக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துளார்.

சென்னை,

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story