ஆபாச வீடியோ... சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆபாச வீடியோ... சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
Published on

திருச்சி,

திருச்சி அருகே உள்ள மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம், தன்னை காதலிக்குமாறு பலமுறை ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த சிறுமி வெங்கட்ராமனை காதலித்துவந்துள்ளார்.

இதனிடையே வெங்கட்ராமன் தனது செல்போனை அந்த சிறுமியிடம் கொடுத்து இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வெங்கட்ராமன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துவைத்துள்ளார்.

பின்னர் அந்த ஆபாச வீடியோவை சிறுமியிடம் காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, மிரட்டலுக்கு பயந்து நீண்ட நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். அதன்பிறகு அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆனாலும் வெங்கட்ராமன் சிறுமியை மிரட்டியதுடன் அவருக்கு தாலி கட்டி அதனை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் வெங்கட்ராமன், சிறுமியிடம் தன்னுடன் தொடர்ந்து பாலியல் உறவுக்குட்பட வேண்டும். இல்லையென்றால் தான் எடுத்த வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வெங்கட்ராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com