ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு

ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு
Published on

கரூர் மாவட்ட பட்டியலின விடுதலை பேரவை சார்பில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமையில், கரூர் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே ஒண்டிவீரனின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பட்டியலின விடுதலை பேரவையின் மாநில பொருளாளர் தனபாலன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலா, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பட்டியலின விடுதலை பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை வைக்க பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று விரைவில் அம்பேத்கர் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தரப்பினரும் ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு சென்று நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com