டிக்கெட் எடுக்காமல் பஸ்களில் ஓசி பயணம்: கடந்த 2 மாதங்களில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூல்

பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக பிடிபட்டவர்களிடம் இருந்து கடந்த 2 மாதங்களில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
டிக்கெட் எடுக்காமல் பஸ்களில் ஓசி பயணம்: கடந்த 2 மாதங்களில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூல்
Published on

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகர பஸ்களில் உரிய பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போரிடம் இருந்து அதிகபட்ச அபராத தொகையாக ரூ.500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்ட 1,522 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 550-ம், அக்டோபர் மாதத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்ட 3,122 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்து 500-ம் என மொத்தம் 4 ஆயிரத்து 644 பேரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 50 அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

இனி வரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com