ஆக்கிரமிப்பு கோவில்: சுடுகாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சாமி சிலைக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்த பெண்...!

சென்னையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற அதிகாரிகள் சென்றனர்.
ஆக்கிரமிப்பு கோவில்: சுடுகாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சாமி சிலைக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்த பெண்...!
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றம் நடவடிக்கையில அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றர். இந்த நடவடிக்கையின் மூலம் பல நீர்நிலைகளை அதிகாரிகள் மீட்டெடுத்து உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு புறம் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் இருந்து வருகின்து.

அந்த வகையில், சென்னை தாம்பரம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்றுவற்காக அதிகாரிகள் சென்றனர். அதனை அறிந்து அப்பகுதியினர் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் சாமியார் ஒருவர் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். அப்போது, உன் இடத்தை எவன் அனுபவிக்க நினைக்கிறானோ அவனை சுடுகாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோபத்தோடு சாபம் விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கிருந்து தெறித்து ஓடினர். மேலம், கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலை அகற்ற கால அவகாம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com