

நெல்லை
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயிலில் உள்ள வெள்ளி தேர் புனரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்றுவந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயிலின் மேற்கு மற்றம் வடக்கு வாசலை 10 நாளில் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 2004-ல் பூட்டப்பட்ட 2 வாசல்களையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என கூறினார்.