சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு

பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு செய்தனர்.
சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு
Published on

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த ஆலம்பாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் பாலம் ரோடூ வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஆலம்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து முடிந்துள்ளன. அந்த பணிகளை சென்னை நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிமுடிந்த சாலைகளில், சிக்னல் போர்டுகள், பஸ் நிறுத்த அடையாள குறிகள் போன்றவை சரியான முறையில் நிறுவ அறிவுரை வழங்கினார். மேலும் பணி முடிக்கப்பட்ட மேம்பாலத்தின் தரம் குறித்தும், செய்யப்பட்ட வேலைகளின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோட்டபொறியாளர் சசிகுமார், உதவி கோட்டபொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறியாளர் கபிலன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com