பறவை காய்ச்சல் தடுப்பு பணியை அதிகாரி ஆய்வு

புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை கால்நடை நோய் ஆராய்ச்சி நிலைய அதிகாரி சத்தியநாராயணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பறவை காய்ச்சல் தடுப்பு பணியை அதிகாரி ஆய்வு
Published on

செங்கோட்டை:

கேரளாவில் இருந்து பறவை காய்ச்சல் நோய் தமிழகத்துக்கு பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள புளியரை சோதனை சாவடியில் நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பொன்வேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியேர் தலைமையில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் அமைத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து கால்நடைகள், வாத்து, கோழிகள், முட்டைகள், இறைச்சி, கோழி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சன்னை கால்நடை நோய் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சத்தியநாராயணன் புளியரை சேதனை சாவடிக்கு நேற்று திடீரென நேரில் வந்து பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிப்பது குறித்தும், கால்நடைகள், இறைச்சி உள்ளிட்டவற்றை கொண்டு வருவதை தடுக்கும் வகையிலும் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கிருமிநாசினி தெளிப்பதை பார்வையிட்டார். முகாமில் அலுவலர்களின் பணியை வெகுவாக பாராட்டினார். முன்னதாக, அவரை முகாமில் பணியாற்றி வரும் கால்நடை டாக்டர்கள் ஜெயபால்ராஜா, செல்வராணி, கால்நடை ஆய்வாளர் தினேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் லூர்து பிரான்சிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com