தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தா.
தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
Published on

தியாகதுருகம், 

தியாகதுருகம் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சிகள் திட்ட இயக்குனர் செல்வராணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தியாகதுருகத்தில் இருந்து உதயமாம்பட்டு வரை ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை தரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். இதேபோல் தியாகதுருகம் அருகே வேளாக்குறிச்சி, முடியனூர் ஆகிய ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய், பெண்கள் கழிவறை கட்டிடம் கட்டும் பணி, பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, குளம் அமைத்தல், தானியக்களம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொது மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், செந்தில் முருகன், உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயன், இளந்தென்றல், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி எத்திராஜ், இளங்கோவன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com