வீட்டுக்கு மின் இணைப்பு கேட்ட பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்

இளநிலை பொறியாளர் விடுப்பில் சென்றதால், இதுதொடர்பாக அவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஜவகர்முத்து கூறினார்.
வீட்டுக்கு மின் இணைப்பு கேட்ட பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்
Published on

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் வெள்ளமடம் ஆதித்தபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 35 வயது ஆகிறது. இவர் கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து விதிகளுக்கு உட்பட்டு வீடு கட்டியுள்ளேன். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு தோவாளை மின்சார வாரிய இளநிலை பொறியாளரை நேரிலும், செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது உனக்கு மின் இணைப்பு தேவை என்றால் என்னோடு உல்லாசமாக இருக்க வேண்டும் என்றார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக தாங்கள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு மின் இணைப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவுடன் அதிகாரி பேசும் ஆடியோ பதிவையும் கொடுத்திருந்தார்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஜவகர் முத்து, பெண்ணிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இளநிலை பொறியாளர் விடுப்பில் சென்றதால், இதுதொடர்பாக அவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் ஜவகர்முத்து கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com