'தினத்தந்தி' செய்தி எதிரொலி; கூடலூரில் ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் சோதனை

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூடலூரில் ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி; கூடலூரில் ஓட்டல், கடைகளில் அதிகாரிகள் சோதனை
Published on

கூடலூரில் மெயின் பஜார், கிழக்கு மார்க்கெட் வீதி, எல்.எப்.ரோடு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், ஓட்டல், இறைச்சிக்கடை போன்றவற்றில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராகவன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று கூடலூரில் உள்ள ஓட்டல், கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் 3 கிலோ, ரசாயன பவுடர் கலந்த கோழி இறைச்சி 4 கிலோ, காலாவதியான பலகாரங்கள் 7 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்ற 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com