பரங்கிமலையில் 166 ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு; சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவம்

பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் மையத்தில் பயிற்சி முடித்து சென்ற ராணுவ அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது.
பரங்கிமலையில் 166 ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு; சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவம்
Published on

ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) தேர்வு செய்யப்படும் இளம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இங்கு நடப்பாண்டில் 125 ஆண்கள், 41 பெண்கள் உள்பட 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 4 ஆண் அதிகாரிகள், 26 பெண் அதிகாரிகள் உள்பட வெளிநாட்டினை சேர்ந்த 30 பேர்களும் அடங்குவர். இந்த நிலையில், கடந்த 49 வாரங்களாக நடந்து வந்த ராணுவ வீரர்-வீராங்கனைகளின் பயிற்சி நிறைவடைந்தது. பயிற்சி முடித்த வீரர், வீராங்கனைகளுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது.

விஷ்வ குமாருக்கு வீரவாள்

பயிற்சி நிறைவு விழாவில் 'வீரவாள்' (ஸ்வார்ட் ஆப் ஆனர்) பரிசை ஏ.விஷ்வா குமார் பெற்றார். அதனைத்தொடர்ந்து நேகா சர்மாவுக்கு தங்க பதக்கமும், அபிநவுக்கு வெள்ளிப்பதக்கமும், கிருஷ்ண குமாருக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

கடந்த 1995-ம் ஆண்டு உத்தரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த சுமிதா சதுர்வேதி என்ற பெண் முதல் ராணுவ அதிகாரியாக பரங்கிமலையில் பயிற்சி பெற்று ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் தன்னுடைய மகன் ரஜத் ரஞ்சன் கெரோனை பரங்கிமலையில் சேர்த்து ராணுவ அதிகாரியாக மாற்றி உள்ளார். மகனை ராணுவ அதிகாரியாக சேர்த்தது குறித்து சுமிதா சதுர்வேதி கூறும்போது, 'என்னுடைய மகனும் ராணுவ அதிகாரியாக சேர்ந்ததில் பெருமை கொள்கிறேன். என்னுடைய மகன் எங்கள் தலைமுறையில் 3-வது அதிகாரியாக தேர்வாகி உள்ளான். ராணுவ குடும்பத்தை சேர்ந்த என்னுடைய மகனும் ராணுவத்தில் சிறந்த சேவை ஆற்றுவார்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com