அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய தடை

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய தடை
Published on

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் 60 நாட்களுக்கு தற்காலிகமாக தமிழக அரசால் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளான அசிபேட், மோனோகுரோடோபாஸ், குளோரிபைரிபாஸ், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ், சைபர் மெத்ரின், புரோபனோபாஸ், குளோரி பைரிபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் மார்ச் 1 முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 60 நாட்களுக்கு தமிழக அரசால் தற்காலிக மாக தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் (ரேடால்) எலி மருந்தினை நிரந்தரமாக பயன்படுத்த தடை செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்த பூச்சிக்கொல்லியினை பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தல் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடும் நடவடிக்கை

மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் தடைசெய்யப்பட்ட இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்றைய தேதிவரை 78 பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேற்காணும் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாணையை மீறி மேற்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தால் பூச்சிக்கொல்லி சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதி 1971-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் உடன் ரத்து செய்யப்படும் என ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com