திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்
Published on

திருச்சி,

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் புதுப்பித்து கட்டப்பட்ட நிலையில், அதன் முகப்பு நுழைவு வாயிலில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழி எழுத்துக்களிலும் “கர்தவ்ய த்வார்” என்ற இந்தி வார்த்தை எழுதப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர், அங்கிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர்.

இந்த நிலையில், தீவிர எதிர்ப்பின் எதிரொலியாக திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன்படி நுழைவு வாயிலில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டிருந்த ‘கர்தவ்ய த்வார்’ என்ற வார்த்தை தற்போது நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com