அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு விபத்துகளுக்கு காரணம்

அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு ஆலை விபத்துகளுக்கு காரணம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
அதிகாரிகள் கடமை தவறியதே பட்டாசு விபத்துகளுக்கு காரணம்
Published on

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

பட்டாசு ஆலைகளை முறையாக ஆய்வு சய்ய வேண்டிய அதிகாரிகள் கடமை தவறியதுதான் விபத்துகளுக்கு காரணம்.

பட்டாசு ஆலை தொழிலாளர்களின் ஊதியங்களை முறைப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இலங்கை அரசின் தூண்டுதலால்தான் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் உள்ள குவாரிகளை யாருக்கும் ஏலம் விடக்கூடாது. அரசே நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com