வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்

தியாகதுருகம் அருகே வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்
Published on

தியாகதுருகம்,

தியாகதுருகத்திற்கு அருகே பானையங்கால் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுடன் வேளாண் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கி உழவன் செயலி மற்றும் தமிழ் மண்வளம் தளம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு வரவேற்றார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளுக்கு இடையில் பணம் நிறுத்தப்பட்டிருந்தால் அந்த விவசாயி மீண்டும் உதவி தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் முத்துகிருஷ்ணன் விவசாயிகளின் பயிர் சாகுபடி, பயிர் பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து பானையங்கால் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், புடலங்காய் பயிர்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதுடன், பூச்சி தாக்குதல் மற்றும் பயிர்களை தாக்கும் நோய்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அட்மா தொழிநுட்ப பணியாளர்கள் சூரியா, ரவி மற்றும் கலைவாணன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் வனிதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com