

திருப்பூர் ,
காங்கயம் நகரம் மற்றும் பஸ் நிலைய பகுதியில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஒருசில கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் பைகளை அவர்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு, சாலையோரமாக வீசிச்செல்கின்றனர். இது, கழிவுநீர் கால்வாயில் விழுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கடைகள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, நகராட்சி ஆணையர் பால்ராஜ் தலைமையிலான அதிகாாிகள் காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், 55 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் பைகள் குறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.