ஆரணியில் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு....!

ஆரணியில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஆரணியில் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு....!
Published on

ஆரணி,

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடிர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பஜார் வீதி மார்க்கெட் வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஹோட்டல் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில்

அப்போது 15-க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து ஷவர்மர போன்ற சிக்கன சம்மந்தபட்ட உணவை பரிசோதனைக்காக பறிமுதல் செய்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com