ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கெட்டுப்போன கோழி இறைச்சி, அரிசி சாதம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
Published on

தஞ்சாவூர்;

தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கெட்டுப்போன கோழி இறைச்சி, அரிசி சாதம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சவர்மா சாப்பிட்ட மாணவி பலி

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சசிகுமார், விஜயகுமார், ரெங்கராஜ், சந்திரமோகன் ஆகியோர் தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல்கள் மற்றும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். ஓட்டல்களில் தரமான உணவு விற்பனை செய்யப்படுகிறதா? கெட்டுப்போன இறைச்சி வகைகள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.

கோழி இறைச்சி- அரிசி சாதம் பறிமுதல்

தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது கும்பகோணத்தில் ஒரு உணவகத்தில் குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன கோழிக்கறி 6 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் துரித உணவு வகைகளுக்காக தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த அரிசி சாதமும், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சில உணவகங்களில் இருந்து உணவுகள் சோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com