மேட்டூர், ஆத்தூர், சங்ககிரியில் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை-சுகாதாரம் இல்லாத இறைச்சி பறிமுதல்

மேட்டூர், ஆத்தூர், சங்ககிரியில் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரம் இல்லாத இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மேட்டூர், ஆத்தூர், சங்ககிரியில் ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை-சுகாதாரம் இல்லாத இறைச்சி பறிமுதல்
Published on

மேட்டூர்

மேட்டூர், கொளத்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் 15 உணவகங்களில் சோதனை நடத்தினர். இதில் 8 ஓட்டல்களில் சுகாதாரம் இல்லாத இறைச்சி, மீன் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உணவு தயாரிப்பதற்கு மீண்டும் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு 3 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆத்தூர்

ஆத்தூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கண்ணன் தலைமையில் அலுவலர்கள் ஆத்தூர் விநாயகபுரம், நரசிங்கபுரம் பகுதிகளில் துரித உணவகங்கள், சில்லி சிக்கன், பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் கடைகளில் நேற்று 2-வது நாளாக சோதனை மேற்கொண்டனர். அப்போது காலாவதியான இறைச்சியை சமைத்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுகாதாரம் இல்லாத பிரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் போன்ற உணவு வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 4 கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 6 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரி

சங்ககிரி உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட குழுவினர் சங்ககிரியில் பல்வேறு ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான உணவு, இறைச்சி வைத்திருந்தவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை க்கப்பட்டது. மேலும் உணவு நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமும் வசூலிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com