கனியாமூர் தனியார் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஆர்டிஓ, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்
கனியாமூர் தனியார் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் ,நடந்த போராட்டத்தின் போது கலவரத்தில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் டு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது . இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று ஆர்டிஓ, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்ததை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com