

நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் உத்தரவின் பேரில், தொழிலாளர் முத்திரை அளவீடு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
இதில் பழனி தொழிலாளர் துணை ஆய்வாளர் மனோஜ் சியாம் சங்கர் தலைமையில் நிலக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் செந்தில் ஆண்டவன், முத்திரை ஆய்வாளர் விஜயராகவன், பழனி முத்திரை ஆய்வாளர் ராஜமுருகன், பழனி உதவி ஆய்வாளர் நக்ருதீன் பானு, பழனி சரக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் கடைகளில் உள்ள தராசுகள், எடைக்கற்களை ஆய்வு செய்தனர்.
இதில் முத்திரையிடப்படாத எடை அளவுகள் மற்றும் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தராசுகளுக்கு உரிய காலத்திற்குள் மறு முத்திரை இட்டுக் கொள்ளவேண்டும் என்று வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.