1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை


1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை
x

கோப்புப்படம்

சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது.

தஞ்சாவூர்


தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில், இன்று காலை சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர்.

அதில் கடந்த 2022ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாதது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அந்த அரிசியை கால்நடை தீவனமாக மாற்றவும், உரிய காலத்தில் வினியோகம் செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த குழுவின் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.

1 More update

Next Story