ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம் எதிரொலியால் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
Published on

சென்னை,

ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலி பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொது மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகிறது.

இந்தநிலையில் வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, ஊபர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இரண்டாவது நாளாக ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த டிரைவர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com