மூதாட்டி பிணம்

கன்னிவாடி அருகே அலுகிய நிலையில் மூதாட்டி பிணம் கிடந்தது.
மூதாட்டி பிணம்
Published on

கன்னிவாடி அருகே குயவன்நாயக்கன்பட்டியில் கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது கோவில் அருகே அழுகிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பாலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com