சாணார்பட்டி அருகே புதருக்குள் மூதாட்டி பிணம்

சாணார்பட்டி அருகே புதருக்குள் கிடந்த மூதாட்டி பிணம் மீட்கப்பட்டது.
சாணார்பட்டி அருகே புதருக்குள் மூதாட்டி பிணம்
Published on

சாணார்பட்டியை அடுத்த எமக்கலாபுரம் அருகே வேலாம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள புதருக்குள், 60 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள், சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, மூதாட்டியின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com