மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
Published on

மாயனூர் அருகே உள்ள மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக கரூருக்கு சென்று விட்டு, ஊருக்கு கரூர்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பாது இவருக்கு பின்னால் மணவாசி முடக்கு சாலையை சேர்ந்த சுகுமார் (22) மற்றொரு மோட்டார் சைக்கிளில், லலிதா (60) என்பவரை அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது எதிபாராத விதமாக பரத்குமார் மோட்டார் சைக்கிள் மீது, சுகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட லலிதா படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com