

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மனைவி காசாம்பு (வயது 70). இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் அங்குள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று காசாம்பு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.