வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தா.
வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் செஞ்சி ரோடு சந்தைமேடு அருகில் சுமார் 75 வயதுடைய மூதாட்டி காயத்துடன் கிடந்தார். அவர், ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரோஷனை போலீசார் விசாரித்தனர். அதில் அந்த மூதாட்டி திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த கோதாவரி (வயது 75) என்பது தெரியவந்தது.

மேலும் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com