வாகனம் மோதி மூதாட்டி பலி

கூடலூரில் வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

கூடலூரில், லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் பகவதி அம்மன் கோவில் அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கூடலூர் 13-வது வார்டு எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் (வயது 80) என்பதும், நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அந்த வழியாக வந்த வாகனம் மாதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com