வாகனம் மோதி மூதாட்டி பலி

எரியோடு அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

எரியோடு அருகே உள்ள உசிலம்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த முத்தன் மனைவி சுப்பம்மாள் (வயது 67). இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் வேடசந்தூர்- கோவிலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயம் அடைந்த சுப்பம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com