கஞ்சா விற்ற முதியவர் கைது

கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற முதியவர் கைது
Published on

கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா வைத்து விற்பனை செய்ததாக ராஜேந்திரன் (வயது 64) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com