பேரன் திருமணத்துக்கு அழைக்காததால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை

பேரன் திருமணத்துக்கு அழைக்காததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்புரத்தை அடுத்த சின்னக்குமார்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (87 வயது). விவசாயியான இவர் கடந்த 4-ந்தேதி திடீரென்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆறுமுகத்தின் மகள் அரியபுரத்தில் வசித்து வருகிறார். அவருடைய மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஆறுமுகத்தை அவரது பேரன் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com