முதியவர் விஷம் குடித்து தற்கொலை

புளியங்குடி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 70). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் அவர் தனக்கு சொந்தமான இடத்தை சமீபத்தில் அதே ஊரை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு பத்திரம் கிரயம் முடித்து கொடுத்துள்ளார். இதற்கு காளியப்பனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் காணப்பட்ட காளியப்பன் கடந்த 19-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com