நாகர்கோவிலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

நாகர்கோவிலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொணட்ர்.
நாகர்கோவிலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நாகர்கேவில்:

நாகர்கேவில் ஊட்டுவாழ்மடம் பகுதியை சேர்ந்தவர் பரமதாஸ் (வயது 86). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு உடல் நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த பரமதாஸ் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு அஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரமதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டார் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

X

Daily Thanthi
www.dailythanthi.com