தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

தேனியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
Published on

தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 67). இவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் எதிரே எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலையில் இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். வழக்கமாக காலை 8.30 மணியளவில் அவர் வீட்டுக்கு சாப்பிட வருவது வழக்கம். ஆனால் இன்று சாப்பிட வராததால் அவருடைய குடும்பத்தினர் கடைக்கு சென்றனர். அப்போது கடையின் ஷட்டர் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. அதை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த மின்விசிறியில் தர்மராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த அறையில் ரத்தம் உறைந்து கிடந்தது. தூக்குப்போட்ட போது அவர் தனது நாக்கை கடித்து கொண்டதால் ரத்தம் வெளியேறியதாக தெரியவந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களின் குடும்பத்தினர் தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தர்மராஜின் மனைவி முத்துலட்சுமி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது கணவருக்கு மதுபழக்கம் இருந்ததாகவும், மதுகுடிக்க மகன்களிடம் கையேந்தும் நிலைமை உள்ளதாக புலம்பி வந்த நிலையில் தற்கொலை செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com