தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் மணக்காடு பிடாரிக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (60). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com