தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

ஆற்காடு அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கலர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 75), இவர் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் படுக்க சென்றார்.. நேற்று அதிகாலை குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சுந்தரமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com