நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொணடார்.
நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மேலராமன்புதூர் கென்னடிதெருவை சேர்ந்தவர் ஜோக்கியன் (வயது 73). இவர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஜோக்கியன் நேற்று வீட்டின் வெளியே உள்ள சமையலறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சிடைந்த உறவினர்கள் நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பேலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-----

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com