டாஸ்மாக் கடை அருகே முதியவர் பிணம்

நாமக்கல் பஸ் நிலையம் டாஸ்மாக் கடை அருகே முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை அருகே முதியவர் பிணம்
Published on

நாமக்கல் பஸ்நிலையத்தில் மினிபஸ்கள் நிற்கும் இடத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு எதிரே நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருந்தார். அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com