நாமகிரிப்பேட்டை அருகேவனப்பகுதியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்

நாமகிரிப்பேட்டை அருகேவனப்பகுதியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
Published on

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே வனப்பகுதியில் உள்ள மரத்தில் சுமார் 65 வயதுடைய முதியவர் ஒருவர் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுபற்றி மூலப்பள்ளிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் யோகலட்சுமி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் பற்றிய விவரம் தெரியாததாலும் அழுகிய நிலையில் உடல் காணப்பட்டதாலும் நாமகிரிப்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊர்? ஏன் தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com