கிணற்றில் முதியவர் பிணம்

செஞ்சி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
கிணற்றில் முதியவர் பிணம்
Published on

செஞ்சி

செஞ்சியை அடுத்த விநாயகபுரம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரின் கிணற்றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்டனர். இறந்து கிடந்த முதியவருக்கு சுமார் 70 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இதையடுத்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com