கிணற்றில் முதியவர் பிணம்

கிணற்றில் முதியவர் பிணம் மீட்கப்பட்டது.
கிணற்றில் முதியவர் பிணம்
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரியை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 81). இவரது மனைவி பூரணம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தனுஷ்கோடி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ஒருவர் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்தவர் தனுஷ்கோடி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com