மொரப்பூர்ரெயில் நிலைய பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை

மொரப்பூர்ரெயில் நிலைய பகுதியில் முதியவர் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

மொரப்பூர்:

மொரப்பூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக மொரப்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுதொடர்பாக மொரப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com