சரக்கு வேன் மோதி முதியவர் பலி

சரக்கு வேன் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சரக்கு வேன் மோதி முதியவர் பலி
Published on

திருவண்ணாமலை போளூர் சாலையில் இன்று இரவு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து போளூர் நோக்கி சென்ற சரக்கு வேன் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com