லாரி மோதி முதியவர் சாவு

லாரி மோதி முதியவர் உயிரிழந்தார்
லாரி மோதி முதியவர் சாவு
Published on

கும்பகோணம் அருகே உள்ள மாடாகுடி காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). சம்பவத்தன்று இவர் சென்னியமங்கலம் மெயின்ரோடு அருகே சென்று காண்டிருந்தார்.  அங்கு நின்ற லாரி ஒன்று பின்னால் இயக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com